கோழி தால்சா
| |
|
|
நெய் சாதம், வெண்ணெய் சாதம் ஆகியவற்றுடன் கோழி தால்சாவை சாப்பிட சுவையாக இருக்கும். |
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- துவரம்பருப்பு - 150 கிராம் அல்லது 2/3 கப்
- கோழிக்கறி - 350g
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- பட்டை - 1" நீட்டமான துண்டு
- கிராம்பு – 2
- வெங்காயம் – 200 கிராம்
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் – 3-4
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- தேங்காய்ப்பால் – 150 மி.லி
- கருவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- வெதுவெதுப்பான தண்ணீர் - 100 மி.லி
- உப்பு - சுவைக்கு
- தண்ணீர் - தேவையான அளவு
மசாலா பொடிகள் - மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
- சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 1 1/2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
காய்கறிகள்: - உருளைக் கிழங்கு - 2 பெரியது
- கேரட் – 1 பெரியது
- கத்திரிக்காய் - 6-8
- முட்டைக்கோஸ் - 50 கிராம் (விரும்பினால்)
- சொரக்காய் - 50 கிராம் or 1/4 நடுத்தர அளவு (விரும்பினால்)
- வாழைக்காய் - 1 small (விரும்பினால்)
- மாங்காய் - 2 பெரிய துண்டு (விரும்பினால்)
|
Method: |
- பருப்பை நன்றாக கழுவி வடிகட்டவும். கோழித் துண்டுகளை சுத்தம் செய்து வடிகட்டவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கின் தோலை உரித்து 4-5 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- கேரட்டையும் தோல் சீவி 2 செ.மீ. துண்டுகளாக வெட்டவும்.
- மற்ற காய்கறிகளையும் 1” நீளத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- புளியை சுத்தம் செய்து சில நிமிடங்களுக்கு சூடான தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக பிழிந்து, புளிச்சாறை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
சமைக்கும் விதம்: - அடுப்பில் பிரஷர் குக்கர் கடாயை வைத்து சூடாக்கவும்.
- 300 மி.லி தண்ணீருடன் பருப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
- கடாயை மூடி 2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். வெந்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
- 3-4 லி பிரஷர் குக்கர் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன், கருவேப்பிலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை கிளறவும்.
- பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- அனைத்து மசாலா பொடிகளையும் மற்றும் கோழித் துண்டுகளையும் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- நறுக்கியெடுத்த தக்காளி, உப்பு மற்றும் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
- கடாயில் சுமார் 1 கப் தண்ணீர் ஊற்றி, சட்டியை மூடி
- விசில் வந்தவுடன், அடுப்பை குறைத்து 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
- சமைத்த பருப்பை கோழிக்கறி மற்றும் காய்கறி வேக வைத்த சட்டியில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- புளிச் சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக கலக்கி கொதிக்க வைக்கவும்.
- கடைசியில் கருவேப்பிலை / கொத்தமல்லி இலைகள் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
|
Notes: |
குழம்பில் சொரக்காய் சேர்ப்பதாக இருந்தால், தண்ணீரின் அளவை சிறிது குறைக்கவும். மாங்காய் சேர்ப்பதாக இருந்தால், புளியின் அளவை சிறிது குறைக்கவும்.
சமையல் நேரம் தொடர்பான <a href="/cookingwarning#chicken">எச்சரிக்கை</a>யை தயவு செய்து பார்க்கவும்.
|
|