கீரை பொரியல்
recipe Image
 
ஆரோக்கியமான கீரையை இப்படி சுவையாகவும் பொரித்து சாப்பிடலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • கீரை – 2௦௦ கிராம்
  • வர மிளகாய் – 2
  • சின்ன வெங்காயம் – 5-6 / 1/2 வெங்காயம் நடுத்தர அளவு
  • சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
  • கறிவேப்பிலை – 1 கொத்து (விரும்பினால்)
  • நறுக்கிய இஞ்சி – 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
Method:
  1. கீரையை தண்ணீரில் 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, நன்றாக அலசவும்.
  2. வெங்காயம் மற்றும் மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். கறிவேப்பிலையை கழுவிக்கொள்ளவும்.
  3. பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
  4. கீரை மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
  5. துருவிய தேங்காய் கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
வேக நேரமாகும் கீரையை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சட்டியை மூடி வேக வைக்கவும்