கீரை-பருப்பு கூட்டு
| |
|
|
பருப்புடன் கீரையை சேர்த்து சமைக்கும் சுலபமான மற்றும் சுவையான டிஷ். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
5-6
|
Ingredients: |
- கீரை – 200 கிராம்
- பாசி பருப்பு – 1௦௦கிராம்
- சின்ன வெங்காயம் – 7-8 அல்லது 1 சிறிய வெங்காயம்
- தக்காளி - 1/2
- பச்சை மிளகாய் - 1 ( மிதமான காரத்துக்கு ) அல்லது
- 2 ( அதிக காரத்துக்கு )
- கறிவேப்பிலை – 1 கொத்து
- நெய் – 2 தேக்கரண்டி ( விரும்பினால் )
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
மசாலாத் தூள்:: மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி |
Method: |
- பருப்பைக் கழுவி தண்ணியை வடிகட்டவும்.
- பிரஷர் குக்கரை சூடாக்கி அதில் பருப்பு , 2௦௦ மி.லி தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 1 விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- கீரை சேராக இருந்தால், வேரை நீக்கிவிட்டு 2-3 முறை நன்றாக கழுவி, நறுக்கிக் கொள்ளவும். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைத்தோ அல்லது பச்சையாகவே பருப்பில் சேர்க்கலாம்
- சமைத்த பருப்புடன் கீரை, மிளகாய், தக்காளி மற்றும் பாதியளவு வெங்காயம் சேர்த்து சட்டியை மூடி சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வேறொரு கடாயை சூடாக்கி, கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து வறுக்கவும்.
- இதை பருப்புடன் சேர்க்கவும்.
- அதில் நெய் சேர்த்து சில நிமிடங்கள் குறைந்த சூட்டில் மூடி வைக்கவும்.
|
Notes: |
பச்சை மிளகாய் வயிற்றுக்கு சேராவிட்டால் வர மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம் இதை <a href="/recipes/spinach-dhal-curry”>வட இந்திய முறையில்</a> செய்து பார்க்கலாம். இதை சாதம், <a href="/recipes/Tamarind-egg-Curry"> முட்டை புளிக் குழம்பு </a>, <a href="/recipes/Tamarind-egg-omlette-curry">முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு </a> அல்லது <a href="/recipes/Garlic-curry"> பூண்டு குழம்பு </a>ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். |