கீரை-பருப்பு மசாலா
recipe Image
 
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • கீரை - 100 கிராம்
  • பாசி பருப்பு - 125 கிராம்
  • வெங்காயம் - 1
  • பூண்டு - 2 பல்லு
  • தக்காளி - 1/2
  • பச்சை மிளகாய் - 1
  • பட்டை - 1/2" நீளத் துண்டு
  • வெண்ணெய் – 1௦ கிராம் (விரும்பினால்)
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 3 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

மசாலாத் தூள்::

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • Method:
    1. பருப்பை அலசவும். வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்
    2. கீரை சேராக இருந்தால், வேரை நீக்கிவிட்டு 2-3 முறை நன்றாக கழுவி, நறுக்கிக் கொள்ளவும். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைத்தோ அல்லது பச்சையாகவே பருப்பில் சேர்க்கலாம்
    3. பிரஷர் குக்கரை சூடாக்கி, அதில் பருப்பு, 25௦ மி.லி தண்ணீர், 1 பல்லு பூண்டு மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும்.
    4. குக்கரை மூடிவைத்து1 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
    5. ஒரு பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை,மற்றொரு பூண்டு பல்லு, வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
    6. தக்காளி, மிளகாய், மசாலாத் தூள் சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
    7. வேக வைத்த பருப்பு, வெண்ணெய், நறுக்கிய கீரை ஆகியவற்றை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் சமைக்கவும்.
    8. அடுப்பை நிறுத்திவிட்டு, கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
    9. இது கீரை மற்றும் பருப்பால் ஆன ஒரு வட இந்திய உணவாகும். இது சப்பாத்தி/நாணுடன் சாப்பிடக்கூடியது
    Notes:
    இதை <a href="/recipes/Spinach-Dhal-curry"> தென்னிந்திய முறையில் </a> செய்து பார்க்கலாம். மாற்றத்திற்கு <a href="/recipes/Spinach-Chicken-curry">கீரை-சிக்கன் மசாலா</a> அல்லது <a href="/recipes/Spinach-lamb-curry">கீரை-மட்டன் மசாலா </a>வை முயற்சிக்கவும்.