புளி சாதம்
| |
|
|
சமைத்த சாதத்தை புளி கரைசல் மற்றும் இந்திய மசாலா கொண்டு சுவையான புளி சாதமாக்கி வெளியில் செல்லும்போது எடுத்து செல்லலாம். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
10 நிமிடங்கள்
|
Ingredients: |
- சமைத்த சாதம் - 3 கப்
- புளி - 4 cm அளவு உருண்டை
- நல்லெண்ணெய் - 3௦ மில்லி
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்து - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 2 கொத்து
- பூண்டு - 2 பல்லு ( விரும்பினால் )
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை (விரும்பினால்)
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- வேர்க்கடலை (peanut) - 2௦ கிராம் - உடைத்தது ( விரும்பினால் )
- வெந்நீர் - 15௦ மில்லி
|
Method: |
- புளியைக் கழுவி, வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊற வைத்த புளியைப் நன்றாக பிழிந்து, புளிக் கரைசலை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- பூண்டை உரித்து கழுவவும். கறிவேப்பிலையையும் கழுவவும்.
- ஒரு அகண்ட பாத்திரத்தில் சூடான சாதத்தைப் போடவும். சாதம் ஆரி இருந்தால் சூடாக்கி வைக்கவும்.
- 1 லிட்டர் பாத்திரத்தை சூடாக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், கடலை, பூண்டு, மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் புளி கரைசல் சேர்த்து 3-5 நிமிடங்கள் அல்லது புளியில் இருந்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
- அடுப்பை நிறுத்தி விட்டு, கலவையை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
- புளிப்பான புளி சாதம் தயார்.
|
Notes: |
சமைத்த சாதத்தை 250 மில்லி கப்பில் அளந்துகொள்ளவும். வேக வைத்த முட்டை மற்றும் <a href="/recipes/Potato-fry”>உருளைக்கிழங்கு பொரியல் </a>-உ டன் சாப்பிட ஏற்றது. |