காய்கறி புளிக் குழம்பு
| |
|
|
புளிக் குழம்பில் காய்கறிகள் சேர்த்து சுவையாக சாப்பிடலாம். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- புளி – 1" அளவு உருண்டை / பெரிய நெல்லிக்காய் அளவு
- சின்ன வெங்காயம் – 12 அல்லது 1 வெங்காயம் சிறியது
- தக்காளி - 1/2
- பூண்டு - 2 சிறிய பல்லு
- பச்சை மிளகாய் - 1
- முருங்கைக்காய் - 1/2
- கத்திரிக்காய் - 3
- கேரட் - 1/2
- சுரைக்காய் - 5௦ கிராம் அல்லது 1/3 நடுத்தர அளவு
- கொண்டைக்கடலை - 50 கிராம் (விரும்பினால்)
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- தேங்காய் பால் - 150 மில்லி
- வெந்நீர் - 200 மில்லி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - தேவைக்கேற்ப
- உப்பு - சுவைக்கேற்ப
மசாலாத் தூள்:: மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி மிளகுத் தூள் -1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் - 3 தேக்கரண்டி |
Method: |
- புளியைக் கழுவி சில நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும்.
- முருங்கைக்காயை 3-4 துண்டுகளாகவும், ஒவ்வொரு கத்திரிக்காயையும் 3-4 துண்டுகளாகவும், கேரட்களை சிறிய துண்டுகளாகவும், சுரைக்காயைபெரிய துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும். கொண்டைக்கடலை சேர்ப்பதானால், அதை 2 மணி நேரம் ஊற வைத்து தனியாக வேக வைத்து கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாயை வெட்டி வைக்கவும். கறிவேப்பிலையை கழுவிக் கொள்ளவும்.
- ஊற வைத்த புளியைப் நன்றாக பிழிந்து, புளிக் கரைசலை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடானதும், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். கொண்டைக்கடலை சேர்ப்பதானால், இப்போ சேர்க்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
- புளிக் கரைசல், 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும்.
- கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
|
Notes: |
<a href="/recipes/marrow-dhal-curry">பருப்பு சுரைக்காய்</a>, <a href="/recipes/Cabbage-Fry"> முட்டைகோஸ் பொரியல்</a> மற்றும் சாதத்துடன் சாப்பிடத் தகுந்தது. <a href="/recipes/Tamarind-egg-omlette-curry">ஆம்லெட் புளிக் குழம்பையும்</a> மற்றும் <a href="/recipes/Tamarind-egg-curry">முட்டை புளிக் குழம்பையும்</a> செய்து பார்க்கலாம். |
|