தட்டுக்கறி
recipe Image
 
ஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • 500 கிராம் இறைச்சி (2-3 செ.மீ. சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)
  • 5 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 3 செ.மீ நீள இலவங்கப் பட்டை
  • 2 கிராம்பு
  • 60 கிராம் வெங்காயம்
  • 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 தேக்கரண்டி துண்டாக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள்
  • தேவைக்கேற்ப நீர்
  • சுவைக்கேற்ப உப்பு

மசாலா பொடிகள்:

  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவைக்கேற்ப 1 அல்லது 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்

அரைக்கத் தேவையான பொருட்கள்:

  • 3 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
Method:
  1. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயை நன்றாகத் துருவி, கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பெருஞ்சீரகம், மிளகு மற்றும் சீரகத்தை நன்றாகப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் ப்ரெஷர் குக்கரை வைக்கவும். பிறகு 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். மீதி எண்ணெயை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  4. எண்ணெய் சூடானவுடன், பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
  5. வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதுயைச் சேர்த்து வறுக்கவும்.
  6. மசாலாப் பொடிகள், உப்பு மற்றும் ஆட்டு இறைச்சி ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். 1/3 கப் தண்ணீரை வாணலியில் சேர்க்கவும். சட்டியை மூடி, மிதமான சூட்டில் சமைக்கவும்.
  7. முதல் விசில் வந்த பிறகு, சூட்டைத் தனித்து, 12-13 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
  8. நான்-ஸ்டிக் வாணலியை சூடு படுத்திக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை சேர்க்கவும்.
  9. அரைத்த தேங்காய், அரைத்த சீரகம், மிளகு மற்றும் கொஞ்சம் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.
  10. மிதமான சூட்டில் 4-5 நிமிடங்கள் அல்லது அனைத்துத் தண்ணீரும் ஆவியாகும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.
  11. சமைத்த இறைச்சியை இப்போது சேர்த்து 7-8 நிமடங்கள் அல்லது முறுமுருப்பாகும் வரை வறுக்கவும. இறைச்சி தீய்ந்து போகாமலும் காய்ந்து போகாமலும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
  12. நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும்.
Notes:
சாதம், <a href="/recipes/Sambar">சாம்பார்</a> அல்லது <a href="/recipes/Bisibella-baadh"> சாம்பார் சாதம்</a>ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும். இறைச்சி சமைக்கும் நேரம் பல்வேறு காரணங்களுக்காக மாறலாம். இது வழிகாட்டுதல் மட்டுமே.