கீமா சான்ட்விச்
recipe Image
 
டோஸ்ட் செய்த கீமா சான்ட்விச்சை விரைவாக செய்ய முடியும் என்பதால் எந்த நேரம் வேண்டுமானால் செய்து சாப்பிட்டு பசியாறலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • பிரட் துண்டுகள் - 8
  • ஆட்டு இறைச்சி கைமா (கொத்து இறைச்சி ) - 200 கிராம்
  • வெங்காயம் – 200 கிராம்
  • இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • தக்காளி கூழ் (Tomato puree) - 2 தேக்கரண்டி
  • வெண்ணெய் அல்லது நெய் - 15-20 கிராம் அல்லது 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

மசாலாத் தூள்::

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • Method:
    1. கொத்து இறைச்சியை அலசி உலர்த்தவும்.வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
    2. நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கவும். அதில் கொத்து இறைச்சியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை
    3. வறுக்கவும். வறுத்தவுடன் இறக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.
    4. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் பழுப்பு நிறம் வரும் வரை வறுக்கவும்.
    5. இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். தக்காளி கூழ், உப்பு மற்றும் மசாலா தூள்கள் சேர்க்கவும்.
    6. வறுத்த கொத்து இறைச்சியை சேர்த்து 12-15 நிமிடங்கள் சமைத்து தனியாக இறக்கி வைக்கவும்.
    7. பிரட்டின் இரு புறமும் வெண்ணெய்/நெய் தடவி, ஒரு பிரட் துண்டு மீது மசாலாவை பரப்பி மற்றொரு பிரட் துண்டு கொண்டு மூடவும்.
    8. அனைத்து பிரட் துண்டுகளுக்கும் இதே செய்முறையை பின்பற்றவும்.
    9. அவற்றை சான்ட்விச் டோஸ்டரில் 3-4 நிமிடங்கள் டோஸ்ட் செய்யவும்.
    Notes:
    <a href="/recipes/toasted-tuna-sandwich">டூனா மீன் சான்ட்விச்சை</a> இதற்கு மாறாக முயற்சிக்கலாம்.