டூனா சான்ட்விச்
| |
|
|
டின் டூனா கிடைத்தால் டோஸ்டட் டூனா சான்ட்விச்சை விரைவாக செய்து ருசியாக சாப்பிடலாம். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
|
Ingredients: |
- பிரட் துண்டுகள் - 8
- சமைத்து வடிகட்டிய டின் மீன் (டூனா ) - 225 கிராம்
- சிவப்பு வெங்காயம் – 1 சிறியது
- குடை மிளகாய் – 1/4 நடுத்தர அளவு
- சீஸ் (Cheddar cheese) - 75 கிராம்
- நுணுக்கிய மிளகு - 1/2 தேக்கரண்டி
- வெண்ணெய் அல்லது நெய் - 20 கிராம் அல்லது 1 மேசைக்கரண்டி
- மயோனைஸ் - 3 மேசைக்கரண்டி ( விரும்பினால் )
|
Method: |
- மீன் துண்டுகளை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- வெங்காயம், குடை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். சீஸைத் துருவிக்கொள்ளவும்.
- மீன் துண்டுகள், வெங்காயம், குடை மிளகாய், நுணுக்கிய மிளகு மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- பிரடின் இரு புறமும் வெண்ணெய் தடவி கொள்ளவும். மீன் கலவையை ஒரு பிரட் துண்டு மீது வைத்து பரப்பவும்.
- அதன் மீது துருவிய சீஸை சேர்த்து அதை இன்னொரு பிரட் துண்டால் மூடவும்.
- மேல் கண்ட செய்முறையை அனைத்து பிரட் துண்டுகளுக்கும் பின்பற்றவும்.
- அவற்றை சான்ட்விச் டோஸ்டரில் 3-4 நிமிடங்கள் டோஸ்ட் செய்யவும்.
|
Notes: |
சீவிய வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை கூட பிரட் துண்டுகளுக்கு நடுவே வைக்கலாம். காரமாக வேண்டுமென்றால். <a href="/recipes/toasted-keema-sandwich">கீமா சான்ட்விச் மாதிரி</a> மசாலா செய்து ப்ரெட் நடுவில் வைக்கலாம். |