தக்காளி சட்னி
recipe Image
 
தக்காளி சட்னி இட்லி/தோசையுடன் சாப்பிட சுவையானது.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 10 நிமிடங்கள்

Ingredients:
  • தக்காளி - 300 கிராம் அல்லது 4
  • வெங்காயம் - 100 கிராம் அல்லது 1 சிறியது
  • காய்ந்த மிளகாய் – 3 மிதமான காரத்திற்கு அல்லது 4 அதிக காரத்திற்கு
  • பூண்டு - 2 பல்லு
  • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி ( விரும்பினால் )
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
Method:
  1. தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். பூண்டை உரித்துக்கொள்ளவும்.
  2. பாத்திரத்தை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். உளுந்து, வர மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
  3. வெங்காயம், பூண்டு சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
  4. அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  5. அவற்றுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மிருதுவான சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
  6. சூடான கடாயில் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  7. அரைத்த சட்னி, உப்பு சேர்த்து சட்னி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
Notes:
இட்லி/தோசையுடன் பரிமாறலாம். வர மிளகாய்க்கு பதிலாக 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் சேர்க்கலாம். உளுத்தம் பருப்பிற்கு பதிலாக கடலை பருப்பு சேர்க்கலாம்.