தக்காளி குருமா
recipe Image
 
தக்காளி குருமா தோசை/சப்பாத்திக்கு செய்யக்கூடிய ஒரு சுலபமான மற்றும் எளிமையான டிஷ்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • தக்காளி - 3
  • வெங்காயம் - 1 சிறியது
  • பச்சை மிளகாய் - 2
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி
  • தக்காளி கூழ் (puree) - 1 தேக்கரண்டி ( விரும்பினால் )
  • தண்ணீர் - தேவைக்கேற்ப
  • உப்பு - சுவைக்கேற்ப

மசாலாத் தூள்::

  • மஞ்சள் தூள் -1/8 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் -3/4 தேக்கரண்டி
  • மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
  • வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:

    • துருவிய தேங்காய் - 1 ½ மேசைக்கரண்டி
    • சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
    Method:
    1. துருவிய தேங்காய் மற்றும் சோம்பை வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    2. கழுவிய கொத்தமல்லி இலை, வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.
    3. ஒரு பாத்திரத்தை சூடாக்கி, எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
    4. தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
    5. மசாலா தூள்கள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
    6. தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சட்டியை மூடி 8-1௦ நிமிடங்கள் சமைக்கவும்.
    7. கறிவேப்பிலை அல்லது கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கலாம்.
    Notes:
    2-3 முட்டை பொத்து ஊற்றி முட்டை ஆனமாக சமைக்கலாம். அதிக சுவைக்கு, 2-3 முட்டைகளை உடைத்து, கடைசியில் சேர்த்து 1-2 நிமிடங்கள் கழித்து இறக்கி மற்றொரு முட்டை ஆனமாக சாப்பிடலாம்.