சேனைக் கிழங்குப் பொரியல்

சேனைக் கிழங்கு பொரியல் எந்த வகையான சைவ குழம்பிற்கும் ஏற்றது.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
• 300 கிராம் சேனைக்கிழங்கு
• 1/2 தேக்கரண்டி சீரகத் தூள் (விரும்பினால்)
• 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
• 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
• 3 மேசைக் கரண்டி எண்ணெய்
• 1 கொத்து கறிவேப்பிலை
• தேவைக்கேற்ப தண்ணீர்
• சுவைக்கேற்ப உப்பு
Method:
1. சேனைக் கிழங்கைக் கழுவி, உரித்து 1 செ.மீ அளவு கொண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றி எண்ணெயை ஊற்றவும்.
3. எண்ணெய் சூடானவுடன் , கறிவேப்பிலை, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள்த் தூள் சேர்க்கவும்.
4. பிறகு நறுக்கிய சேனைக் கிழங்கு மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 2-3 நிமிடம் வரை வறுக்கவும். கடாயை நன்றாக மூடி 8-10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
5. அவ்வப்போது பாத்திரத்தைத் திறந்து காயை நன்றாகக் கிண்டி விடவும். காய் பாத்திரத்தில் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
6. கடைசியில் சிறிது சீரகம் சேர்த்து நன்றாக மொறுமொறுப்பாககும் வரை வறுக்கவும்.
Notes:
மற்றொரு முறை: சேனைக் கிழங்கோடு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, வறுக்கும் கடாயில் நிறைய எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கலாம். சாதம் மற்றும்சாம்பார்., ரசம், மோர்க் குழம்பு, முட்டை புளிக்குழம்பு , <a href="/recipes/Tamarind-egg-omlette-curryஆம்லெட் புளிக்குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.