மோர்க் குழம்பு 02
| |
|
|
எளிமையான முறையில் செய்யும் இதை சாதத்துடன் சேர்த்துக் கொள்ள சுவையாக இருக்கும். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- 350 கிராம் தயிர்
- சின்ன வெங்காயம் – 10-12 அல்லது 1 வெங்காயம் சிறியது
- 1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
- 1/8 தேக்கரண்டி மஞ்சத் தூள்
- 2 மேசைக்கரண்டி கடலை மாவு
- 1 மேசைக் கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 5-6 கறிவேப்பிலை
- 100 கிராம் வெண்டிக்காய் / சேப்பங்கிழங்கு
- தேவைக்கேற்ப தண்ணீர்
|
Method: |
- மூன்றுக்கு நான்கு (3/4) என்ற அளவில் தயிரை எடுத்து கடலை மாவுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- மீதமிருக்கும் தயிரை ஒரு கப் தண்ணீருடன் கலந்து மோராக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்; கறிவேப்பிலையை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்; தேவையான அளவு இஞ்சியை நசுக்கிக் கொள்ளவும்.
- ஒவ்வொரு வெண்டிக்காயையும் மும்மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டிக்காய்க்குப் பதிலாக சேப்பங்கிழங்கைப் பயன்படுத்துவதாக இருந்தால், இவற்றைத் தனியாக தண்ணீரில் உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை உரித்து, ஒவ்வொன்றையும் 2-3 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- நசுக்கிய இஞ்சி மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வறுக்கவும். பிறகு காய்கறிகளைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
- மஞ்சள்த் தூள், கலக்கி வைத்த மோர், உப்பு மற்றும் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, கடாயை மூடி 5-6 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும்.
- தயிர்க் கலவை மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
- தயிர் முறியாத அளவிற்கு குறைந்த சூட்டில் சில நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்கவும்.
|
Notes: |
சாதத்திற்கு சரியான சேர்ப்பு உணவு இது. சிறிய மாற்றத்திற்கு <a href="/recipes/Tamarind-vegetable-curry">புளிக் குழம்பு</a>அல்லது <a href="/recipes/Garlic-curry">பூண்டுக் குழம்பு</a>-ஐ முயற்சிக்கவும். இன்னொரு முறையில் <a href="/recipes/yoghurt-curry"> மோர்க் குழம்பை</a>செய்து பார்க்கலாம். |