சில்லி பீப்
recipe Image
 
சில்லி பீப் என்பது இண்டோ-சைனீஸ் முறையில் வறுக்கப்படும் மாட்டு இறைச்சி ஆகும்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Marination Time :1-2 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • எலும்பில்லா மாட்டு இறைச்சி – 3௦௦ கிராம்
  • எண்ணெய் – 15௦ மில்லி வறுக்க
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • சோயா சாஸ் – 4 மேசைக்கரண்டி
  • கார்ன் ப்ளோர் மாவு –4 மேசைக்கரண்டி
  • வினிகர் – 1 மேசைக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 6-7
  • நறுக்கிய வெங்காய தாள் - 2 தேக்கரண்டி அலங்கரிக்க
Method:
  1. பீப் இறைச்சியை சன்னமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை பொடிசாக வெட்டிக்கொள்ளவும்.
  2. சோயா சாஸ், மிளகு தூள், வினிகர், கார்ன்ப்ளோர் மாவு மற்றும் முக்கால் பங்கு நறுக்கிய மிளகாய் துண்டுகள் சேர்த்து மாவாக கலக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  3. மாவில் 1-2 மணி நேரம் பீப் துண்டுகளை போட்டு வைக்கவும்.
  4. மாவில் ஊறிய பீப் துண்டுகளை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக வறுக்கவும்.
  5. ஒரு நான்-ஸ்டிக் சட்டியை சூடாக்கி அதில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். மீதமுள்ள மிளகாய்களை சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
  6. பொரித்த பீப் துண்டுகளை அதே சட்டியில் சேர்க்கவும்.
  7. நறுக்கிய வெங்காய தாள் தூவி நன்றாக கலக்கி பரிமாறவும்.
Notes:
இதே முறையில் கோழி துண்டுகளை பயன்படுத்தி சில்லி சிக்கன் செய்யலாம்