தேங்காய் பால் மீன் குழம்பு
| |
|
|
தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
4-5
|
Ingredients: |
- வெள்ளை மீன் – 5௦௦ கிராம்
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- பட்டை – 4 cm நீள துண்டு
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 1 (விரும்பினால்)
- வெங்காயம் – 2 சிறியது
- பச்சை மிளகாய் – 3-4
- இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
- டின் தேங்காய் பால் – 7 மேசைக்கரண்டி அல்லது 35௦ மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
- எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி அலங்கரிக்க
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
|
Method: |
- வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து ½ நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை கலக்கவும்.
- மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து 1 நிமிடம் கலக்கவும்.
- உப்பு, 2 கப் தண்ணீர், தேங்காய் பால் சேர்க்கவும். வீட்டில் தயாரித்த தேங்காய் பால் சேர்த்தால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்.
- எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- மீன் சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
- கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
- தேங்காய் பால் மீன் குழம்பு பரிமாறத் தயார்.
|
Notes: |
சாதம்/சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை/மைதா தோசை ஆகியவற்றுக்கு பொருந்தும். |