நண்டு மசாலா
recipe Image
 
நண்டு மசாலா இட்லி/தோசை/சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • நண்டு – 6
  • தக்காளி – 3
  • வெங்காயம் – 2 நடுத்தர அளவு
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலா தூள்:

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 3 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
  • மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

வறுத்து அரைக்க வேண்டியவை:

  • துருவிய தேங்காய் – 2-3 மேசைக்கரண்டி
  • ஜீரகம் – 1½ தேக்கரண்டி
  • மிளகு – 1½ தேக்கரண்டி
Method:
  1. துருவிய தேங்காய், ஜீரகம் மற்றும் மிளகை வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லி இலையை கழுவி நறுக்கிக்கொள்ளவும்.
  3. கடாயை சூடாக்கி எண்ணெயில் பாதியளவு ஊற்றவும்.
  4. வெங்காயம் சேர்த்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. கடாயில் இருந்து வெங்காயத்தை நீக்கி ஆற விடவும். அடுப்பை நிறுத்தவும்.
  6. வதக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியை பசையாக அரைத்துக் கொள்ளவும்.
  7. அதே கடாயை சூடாக்கி மீதமுள்ள எண்ணெய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
  8. அரைத்த வெங்காயம்-தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலா தூள்கள் சேர்த்து 5-6 நிமிடங்கள் வதக்கவும்.
  9. நண்டு துண்டுகள், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 6-8 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும்.
  10. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
  11. நண்டு மசாலா பரிமாறத் தயார்.
Notes:
இது சாதம் மற்றும் <a href=”/recipes/sambar”>சாம்பார்</a>,<a href=”/recipes/Rasam”>ரசம்</a>,<a href=”/recipes/mung-dhal curry”> பருப்பு ஆனம்</a> அல்லது <a href=”/recipes/Dhal”>பருப்பு</a> ஆகியவற்றுக்கு ஏற்றது. இட்லி/தோசை/ஆப்பம்/பிரட் ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.