தால்ச்சா
| |
|
|
தால்ச்சா பருப்பு மற்றும் கத்திரிக்காயின் சுவை கலந்து நெய் சாதம் மற்றும் குஸ்கா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையானது. |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
Serves :
2-3
|
Ingredients: |
- துவரம் பருப்பு – 125 கிராம் அல்லது 1/2 அல்லது 25௦ மில்லி டீ கப்
- கடலை பருப்பு – 3௦ கிராம் அல்லது 2 மேசைக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- பட்டை – 1 inch நீள துண்டு
- கிராம்பு – 2
- வெங்காயம் – 1 நடுத்தர அளவு
- தக்காளி – 2 நடுத்தர அளவு
- பச்சை மிளகாய் – 3
- கத்திரிக்காய் – 7-8 சிறியது அல்லது 200 கிராம்
- மாங்காய் – 2-3 2” துண்டுகள்
- சமையல் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 2-3 தேக்கரண்டி (விரும்பினால்)
- புளி – 1 inch அளவு
- வெந்நீர் – 1௦௦ மில்லி
மசாலா தூள்: - மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
- கொத்தமல்லித் தூள் – 1 தேக்கரண்டி
|
Method: |
தயாரிக்கும் முறை - பருப்பை அலசி வடிக்கவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- கத்திரிக்காயை 1 inch துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்; மாங்காயை 2 inch துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- புளியை கழுவி வெந்நீரில் ஊற வைக்கவும். புளியைக் கரைத்து புளி சாற்றை தனியாக வைத்துக் கொள்ளவும்.
சமையல் முறை: - பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.
- இரு பருப்பு, 3௦௦ மில்லி தண்ணீர் மற்றும் பாதி மஞ்சள் தூள் சேர்த்து, சட்டியை மூடி, பிரஷரில் சமைக்கவும். 2 விசிலுக்குப் பிறகு அடுப்பை நிறுத்தி பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- சமைத்த பருப்பை தனியாக வைக்கவும்.
- 4-5லிட்டர் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- பாதி கருவேப்பிலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக விடவும்.
- மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
- மீதமுள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு, தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் கத்திரிக்காய் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
- 25௦ மில்லி தண்ணீர் சேர்த்து, சட்டியை மூடி, பிரஷரில் 1 விசில் வரும் வரை சமைக்கவும்; அடுப்பை நிறுத்தி, தண்ணீர் குழாயின் அடியில் சட்டியை வைத்து பிரஷர் நீங்கச் செய்து மூடியைத் திறக்கவும்.
- சமைத்த பருப்பு மற்றும் மாங்காயை காய்கறி பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.
- மாங்காய் சேர்த்தால் புளியின் அளவை பாதியாக குறைத்துக் கொள்ளவும்.
- புளி சாறு சேர்த்து கலக்கி சில நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- குழம்பு கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- மீதமுள்ள கருவேப்பிலை கொண்டு அலங்கரிக்கவும்.
- தால்ச்சா பரிமாறத் தயார்.
|
Notes: |
மாறுதலுக்கு முயற்சிக்க <a href=”/recipes/Chicken-Lentils-Curry”>சிக்கன் தால்ச்சா</a> அல்லது <a href=”/recipes/Mutton-Lentils-Curry”>மட்டன் தால்ச்சா</a>. |
|