பருப்பு
| |
|
|
மசூர் பருப்பு மற்றும் மசலாக்களால் ஆன மிகவும் சுலபமான, சுவையான இந்திய உணவு.சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10 நிமிடங்கள்
Serves :
2-3
|
Ingredients: |
- மசூர் பருப்பு (ஆரஞ்சு நிறம்) -125 கிராம்
- நறுக்கிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி
- தக்காளி – 1 சிறியது
- பூண்டு – 3-4 சிறிய பல்லு
- நெய் – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலா தூள்கள்: - கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
|
Method: |
- பருப்பை அலசி வடிக்கவும்.
- வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கிக்கொள்ளவும்.
- பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- பருப்பு, 1௦௦ மில்லி தண்ணீர், வெங்காயம், தக்காளி, 2 பல்லு பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- மூடி வைத்து சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி 1-2 நிமிடங்கள் கழித்து திறக்கவும்.
- அடுப்பின் மீது சிறு கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- மீதமுள்ள பூண்டு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
- இந்த கடாயை நீக்கி பருப்பு பாத்திரத்தை அடுப்பின் மீது வைக்கவும்.
- வறுத்த பூண்டு மற்றும் நெய் சேர்த்து 1-2 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
- கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
|
Notes: |
மசூர் பருப்புக்கு பதிலாக துவரம் பருப்பு கூட உபயோகிக்கலாம். |