எலுமிச்சை சாறு மற்றும் பூண்டின் மணத்தால் சால்மன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.
Preparation Time : 5 நிமிடங்கள்
Marination Time :10-20 நிமிடங்கள் Soaking Time :
Cooking Time :
10 நிமிடங்கள்
Serves :
3-4
Ingredients:
சால்மன் மீன் – 50௦ கிராம்
பூண்டு – 2-3 பெரிய பல்லு – நசுக்கியது
எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி
சன்ஃபிலவர் எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
Method:
நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, அரைத்த மிளகு மற்றும் உப்பு சேர்த்து மாரினேட் செய்யவும்.
மாரினேடில் மீன் துண்டுகளை 8-1௦ நிமிடங்கள் வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். எண்ணெய் சேர்க்கவும்.
மீனை ஒவ்வொரு புறமும் 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வாணலியில் வறுக்கவும். ஆவியை வெளியேற்ற வலை மூடி அல்லது ஏதேனும் துளை உள்ள மூடி கொண்டு மூடவும்.
பரிமாறும் தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
Notes:
சால்மனுக்கு பதிலாக ஏதேனும் வெள்ளை மீன் பயன் படுத்தலாம். வேகவைத்த உருளைக்கிழங்கு, வெள்ளை சாஸ் மற்றும் பச்சை பட்டாணி/ <a href="/courgette-stirfry">சீமைசுரைக்காய் வறுவலுடன்</a> சாப்பிட ஏற்றது.