கோதுமை பணியாரம்
கோதுமை பணியாரம் காலை உணவாக அல்லது தீனியாக உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகை.
Preparation Time :
5 நிமிடங்கள்
Marination Time :
10-20 நிமிடங்கள்
Soaking Time :
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Ingredients:
கோதுமை மாவு – 125 கிராம்
முட்டை – 1
தேங்காய் பால் அல்லது பசும்பால் – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
சோடா மாவு – சிறிதளவு
வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
ரவை – 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் – 2௦௦ மில்லி பொரிக்க
தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும். மாவை சலித்துக் கொள்ளவும்.
முட்டையுடன் கோதுமை மாவு, சர்க்கரை, சோடா மாவு, வெண்ணிலா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்.
உளுந்த வடை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து செமி திக்காக கரைத்துக் கொள்ளவும். மாவு தண்ணியாக இருந்தால் ரவை சேர்க்கவும்.
மாவை 1௦-15 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு அகலமான வறுக்கும் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றவும்.
எண்ணெய் சூடானவுடன், 1 மேசைக்கரண்டி மாவை பந்தாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
ஒரே முறையில் 5-6 பணியாரங்களை பொரிக்கவும்.
மாவு காலியாகும் வரை பணியாரங்களை பொரித்து எடுக்கவும்.