கிரில்டு பிஷ்
recipe Image
 
மீனுடன் எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு சேர்ந்த சத்தான உணவு.
Preparation Time : 5 நிமிடங்கள்

Marination Time :10-20 நிமிடங்கள் Soaking Time :

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 2-3

Ingredients:
  • கானாகெளுத்தி / ரெயின்போ ட்ரௌட் / ஸீபாஸ் (ஒவ்வொன்றும் 3௦௦ கிராம் எடை) – 3
  • பூண்டு – 5 பெரிய பல்லு நசுக்கியது
  • எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் – 2 மேசைக்கரண்டி + 2 மேசைக்கரண்டி கிரில்லின் போது
  • அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது 2
  • தேக்கரண்டி அதிக காரத்துக்கு
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 1 (விரும்பினால்)
  • உப்பு – சுவைக்கேற்ப
Method:
  1. கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.
  2. மீன் மீது இரு புறமும் கீறிக் கொள்ளவும்.
  3. நசுக்கிய பூண்டு, 3/4 அளவு நறுக்கிய கொத்‌தமல்லி இலை, எலுமிச்சை சாறு, 2 மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் அரைத்த மிளகு சேர்த்து கலக்கவும்.
  4. மீனை இந்த சாற்றில் போடவும். மீனில் ஏற்படுத்திய பிளவுகளில் இந்த மாவு செல்லும்மமாறு பார்த்துக்கொள்ளவும்.
  5. 15-2௦ நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  6. கிரில்லை சூடாக்கவும்.
  7. மீனை பெரிய ஓவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
  8. இந்த பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.
  9. மீன் மீது சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  10. ஒரு புறத்தை 5-6 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
  11. பாத்திரத்தை வெளியே எடுத்து மீனை திருப்பி மீனின் மேல் புறம் ஆலிவ் ஆயில் தேய்க்கவும்.
  12. மற்றொரு புறத்தையும் 5-6 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
  13. மீனை கிரில்லில் இருந்து நீக்கி பரிமாறும் பாத்திரத்தில் வைத்து மீதமுள்ள கொத்தமல்லி இலையை வைத்து அலங்கரிக்கவும்.
Notes:
மீன் சிறியதாக இருந்தால்,கிரில் நேரத்தை 2-3 நிமிடங்கள் குறைத்துக் கொள்ளவும். மீன் 3௦௦ கிராமுக்கும் அதிகமாக இருந்தால் கிரில் நேரத்தை 2-3 நிமிடங்கள் அதிகரித்துக் கொள்ளவும்.