கிரில்டு இறால்
recipe Image
 
பூண்டு, ஒலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிரில்லின் கீழ் வறுக்கப்படும் சுவையான உணவு.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 5 நிமிடங்கள்

Serves : 5-6

Ingredients:
  • ஓடுடன் கூடிய ராஜ இறால் – 5௦௦ கிராம்
  • பூண்டு – 4-5 பெரிய பல்லு-நசுக்கியது
  • எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் – 3 மேசைக்கரண்டி
  • அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
  • 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • உப்பு – சுவைக்கேற்ப
Method:
  1. கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.
  2. இறால், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதை 1௦-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  3. கிரில்லை சூடாக்கவும்.
  4. அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஓவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
  5. பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.
  6. இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
  7. பாத்திரத்தை வெளியே எடுத்து இறால்களைத் திருப்பவும்.
  8. மறு புறத்தையும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
  9. இறால்களை கிரில்லில் இருந்து நீக்கி பரிமாறும் பாத்திரத்தில் வைத்து கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
ஒவ்வொரு இறாலும் தலை இல்லாமல் 2inch-ஐ விட நீளமாக இருந்தால், இன்னும் 2 நிமிடங்கள் அதிகமாக கிரில் செய்யவும்.