இனிப்பு இடியாப்ப சோறு
recipe Image
 
மிஞ்சிப் போன இடியாப்பத்தை முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Ingredients:
  • இடியாப்பம் – 9
  • முட்டை – 3
  • சர்க்கரை – 1௦௦ கிராம்
  • தேங்காய் பால்/பசும்பால் – 1௦௦ மில்லி
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 1
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • நெய் – 1 கரண்டி (1௦ மில்லி)
  • வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
Method:
  1. ஒவ்வொரு முந்திரியையும் பாதியாக உடைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு அகலமான கோப்பையில் தேங்காய் பால் / பசும் பாலை வைக்கவும்.
  3. இடியாப்பத்தை பாலில் நனைத்து சிறு துண்டுகளாக பிய்த்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  4. எல்லா இடியாப்பங்களுக்கும் இதே முறையை பின்பற்றவும்.
  5. முட்டையை உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். முட்டையை அடிக்க வேண்டாம்.
  6. ஒரு அகல நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கி 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  7. எண்ணெய் சூடானதும், முந்திரி சேர்த்து வறுத்து கடாயில் இருந்து எண்ணெய் இல்லாமல் நீக்கி தனியாக வைக்கவும்.
  8. மீதமுள்ள எண்ணெயில், கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
  9. முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து 3-4 நிமிடங்கள் அல்லது முட்டை பாதி வேகும் வரை கிளறவும்.
  10. வெண்ணிலா எசென்ஸ், இடியாப்பம் மற்றும் இடியாப்பம் ஊறிய மீதமுள்ள பாலை சேர்க்கவும். பால் மீதம் இல்லை எனில், 2 மேசைக்கரண்டி பசும்பால் சேர்க்கவும்.
  11. நன்றாக கிண்டி நெய் சேர்க்கவும்.
  12. ஒரு கிண்ணத்தில் முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
Notes:
மாற்றத்திற்கு <a href=”/recipes/Spicy-Idiyaappam-egg”>கார இடியாப்ப சோறு</a> செய்து பார்க்கலாம்.