காய்கறி பருப்பானம்
காய்கறி மற்றும் பாசிப் பருப்பு சேர்த்து சமைக்கும் இந்த குழம்பு சாம்பாருக்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு செய்யலாம். |
Preparation Time : 10 நிமிடங்கள்
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
3-4
Ingredients: |
- பாசிப் பருப்பு – 1௦௦ கிராம்
- வெங்காயம் – 1 சிறியது
- பூண்டு – 1 சிறிய பல்லு (விரும்பினால்)
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி – 1 சிறியது
- முருங்கைக்காய் – 1/2
- கத்திரிக்காய் – 3
- கேரட் – 1/2
- சொரக்காய் – 5௦ கிராம் அல்லது 1/4 சொரக்காய்
- மாங்காய் – 2-3 2” துண்டுகள் (விரும்பினால்)
- நெய் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை - 6-7
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலா தூள்கள்: - சோம்புத் தூள் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
Method: |
- பருப்பை அலசி வடிக்கவும்.
- முருங்கைக்காயை 3-4 துண்டுகளாக வெட்டவும். கத்திரிக்காயை 5-6 துண்டுகளாக வெட்டவும். காரட் மற்றும் சொரக்காய் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, மிளகாயை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
- குக்கரை சூடாக்கிக் கொள்ளவும்.
- 225ml தண்ணீர், பூண்டு, மிளகாய், நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் பருப்பை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்.
- குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- ஒரு சின்ன கடாய் எடுத்து சூடாக்கிக்கொள்ளவும்.
- அதில் சிறிது எண்ணெய், கருவேப்பிலை மற்றும் சோம்புத் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- இதை பருப்பு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய், எலுமிச்சைசாறு, மாங்காய் துண்டுகள், உப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- நன்றாக கிளறி சில நிமிடங்கள் மூடிவைத்து கொதிக்க விடவும்.
Notes: |