முட்டை மசாலா
recipe Image
 
கஜானா என்றும் அழைக்கப்படும் முட்டை மசாலா முட்டை கலவையுடன் தேங்காயின் இனிப்பும் பச்சை மிளகாயின் காரமும் சேர்ந்து சுவையாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : 2-3

Ingredients:
  • முட்டை - 3
  • வெங்காயம் - 2 சிறியது (பொடிசாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு அலங்கரிக்க

மசாலா தூள்கள்:

  • மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
Method:
  1. வெங்காயம் மற்றும் மிளகாயை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்
  2. தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.
  3. முட்டையை நன்றாக அடித்து, இஞ்சி–பூண்டு விழுது மற்றும் அரைத்த தேங்காயை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
  4. மிதமான சூட்டில் கடாயை சூடுபடுத்தி எண்ணெயை சேர்க்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை எண்ணையில் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. அனைத்து மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  7. முட்டை கலவையையும் ½ கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  8. தீயை குறைத்து 4-5 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும்.
  9. நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Notes:
இது தோசையுடன் சாப்பிட ஏற்றது.