கீமா சப்பாத்தி
| |
|
|
சப்பாத்தியில் கொத்து இறைச்சியை வைத்து செய்யப்படும் சுவையான உணவு. இதை தனியாக அல்லது ரைத்தாவுடன் சாப்பிடலாம். |
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
|
Ingredients: |
- கோதுமை மாவு (ஆட்டா) – 4௦௦ கிராம் + 1௦௦ கிராம் உருட்ட
- வெதுவெதுப்பான தண்ணீர் – 125 மில்லி
- வெதுவெதுப்பான பால் – 150 மில்லி
- உப்பு – சுவைக்கேற்ப
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – 30 மில்லி (விரும்பினால்)
கீமா உள்ளடம் - கொத்து இறைச்சி (கீமா) – 200 கிராம்
- வெங்காயம் – 150 கிராம்
- இஞ்சி – 1/2” பெரியது மற்றும் 1” மொத்தமான துண்டு
- பூண்டு – 2 பல்லு
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- 1 தேக்கரண்டி தக்காளி பூரி அல்லது 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- கொத்தமல்லி இலை நறுக்கியது – 2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
|
Method: |
- அகலமான கிண்ணத்தில் 350 கிராம் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும்.
- உப்பு, சர்க்கரை, வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து பிசையவும். மீதி 50 கிராம் கோதுமை மாவையும் சேர்த்து நன்றாக பிசையவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். ஒரு மணி நேரம் வைக்கவும்.
- மாவு தயாராகும் வரை கீமா உள்ளடம் செய்யவும்.
- ஒரு மணி நேரம் கழித்து, 4-5 செ.மீ உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- சப்பாத்தி கட்டை எடுத்து உருண்டைகளை சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி கீமா கலவையை எடுத்து, சப்பாத்தி நடுவில் வைத்து பரப்பிவிடவும்.அனைத்து ஓரத்தையும் மூடவும்.
- 9”-10” சப்பாத்திகளாக மீண்டும் தேய்த்து தோசை கல்லில் போடவும்.
- பொன் நிறம் வரும் வரை மிதமான சூட்டில் சுடவும்.
- விரும்பினால் எண்ணெய் சேர்க்கலாம்.
- கீமா சப்பாத்தி சாப்பிட தயார்.
கீமா கலவை செய்முறை: - கீமாவை அலசி வடிகட்டவும்.
- வெங்காயம் மற்றும் மிளகாயை நறுக்கி கொள்ளவும், பூண்டையும் இஞ்சியையும் துருவிக் கொள்ளவும்.
- கடாயை சூடாக்கி, அதில் கீமாவை சேர்த்து தண்ணீர் ஆவியாகும் வரை வேக வைக்கவும்.
- கடாயில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கவும்.
- தக்காளி பூரி அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
- கீமாவை சேர்த்து 7-8 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும்.
- மூடியை திறந்து தண்ணீர் ஆவி ஆகும் வரை சமைக்கவும்.
- கடாயில் இருந்து நீக்கி தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
|
Notes: |
தயிரில் ஊறுகாயை சேர்த்து கலக்கி இதனுடம் சாப்பிடலாம். |
|