கொத்து பருப்பு
recipe Image
 
கொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • துவரம் பருப்பு – 150 கிராம் அல்லது 25௦ மில்லி டீகப்பில் 2/3 அளவு
  • வெங்காயம் – 150 கிராம்
  • தக்காளி – 1
  • மிளகாய் – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • முட்டை – 3

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • சோம்பு/பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
Method:
  1. துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. வெங்காயத்தை நீளமான துண்டுகளாகவும், தக்காளி மற்றும் மிளகாயை சிறிய துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  3. 3லிட்டர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  4. வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  5. ஜீரகத் தூள் மற்றும் மஞ்சள் தூள் தவிர அனைத்து மசாலாத் தூள்களும் சேர்த்து வதக்கவும்.
  6. 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. சீரகத் தூள், உப்பு மற்றும் பருப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. ஒவ்வொரு முட்டையாக உடைத்து கடாயில் ஊற்றவும்; முட்டை வேகும் வரை சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.
Notes:
இதை <a href=”/recipes/Ghee rice”> நெய் சாதத்துடன்</a> சாப்பிடலாம்.