சிக்கன் மஞ்சுரியன்
recipe Image
 
சிக்கன் மஞ்சுரியன் இந்தோ-சைனீஸ் முறையில் செய்யப்படும் சுவையான உணவு.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :2-3 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 5-6 ஆட்கள்

Ingredients:
  • எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
  • குடை மிளகாய் – 1
  • வெங்காயம் பெரியது - 1
  • பச்சை மிளகாய் – 4-5
  • இஞ்சி – 1” நீள மற்றும் 1” அகல துண்டு
  • பூண்டு – 2 பல்லு
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • தக்காளி கூழ் – 4 மேசைக்கரண்டி அல்லது
  • தக்காளி சாஸ் – 6 மேசைக்கரண்டி அல்லது
  • தக்காளி - 3
  • சிக்கன் ஸ்டாக் அல்லது தண்ணீர்– 200 மில்லி
  • கார்ன் ப்ளோர் மாவு – 4 மேசைக்கரண்டி
  • மைதா மாவு – 4 மேசைக்கரண்டி
  • டார்க் சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
  • லைட் சோயா சாஸ் – 4 மேசைக்கரண்டி
  • முட்டை – 2
  • அஜினோமோட்டோ – சிறிதளவு (விரும்பினால்)
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 25௦-3௦௦ மில்லி வறுக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
  1. கார்ன் ப்ளோர் மாவு, மைதா மாவு, டார்க் சோயா சாஸ், முட்டை, மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து மாரினேட் செய்யவும். அஜினோமோட்டோ சேர்க்க விரும்பினால் இதில் சேர்க்கவும்.
  2. சிக்கன் துண்டுகளை 2 மணி நேரம் மாரினேட்டில் ஊற வைக்கவும்.
  3. மிதமான சூட்டில் கடாயை சூடாக்கி 1 மேசைக்கரண்டி எண்ணெய் தவிர மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.
  4. சிக்கன் துண்டுகளை பொரித்து தனியாக வைக்கவும்.
  5. அனைத்து துண்டுகளையும் பொரித்த பின் மாரினேட்டை தனியாக வைக்கவும்.
  6. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்; குடை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்; இஞ்சி மற்றும் பூண்டை துருவிக் கொள்ளவும்.
  7. தனியாக ஒரு கடாயை சூடாக்கி 1 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  8. நறுக்கிய வெங்காயம், மிளகாய், துருவிய இஞ்சி, பூண்டு, குடை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
  9. தக்காளி கூழ் அல்லது தக்காளி சாஸ் அல்லது அரைத்த தக்காளி , சோயா சாஸ் மற்றும் சிக்கன் stock அல்லது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சாசை சுவைத்து பின்பு உப்பு சேர்ப்பதை பற்றி முடி வெடுக்கவும்.
  10. மாரினேட் மற்றும் சமைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
  11. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
  12. சிக்கன் மஞ்சுரியன் சாப்பிடத் தயார்
Notes:
சாதம்/ சப்பாத்தி அல்லது கோதுமை/மைதா தோசையுடன் சாப்பிட ஏற்றது.