முட்டை பருப்பாணம்

முட்டை பருப்பாணம், பாசிப் பருப்பு ஆணத்தில் முட்டை ஆம்லெட் சேர்த்து செய்யப்படும் குழம்பு. |

Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time :
20-30 நிமிடங்கள்
Serves :
3-4

Ingredients: |
- பாசி பருப்பு – 1௦௦ கிராம்
- வெங்காயம் – 1/2 நடுத்தர அளவு
- பூண்டு – 1 சிறிய பல்லு (விரும்பினால்)
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 1 சிறியது
- நெய் – 1 தேக்கரண்டி அல்லது வெண்ணெய் – 5 கிராம் (விரும்பினால்)
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை – 6-7
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலாத் தூள்: - மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- அரைத்த சோம்பு – 1/2 தேக்கரண்டி
ஆம்லேட் செய்ய தேவையானவை: - முட்டை நடுத்தர அளவு – 3
- சின்ன வெங்காயம் – 1௦ அல்லது 1 சிறிய வெங்காயம்
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி

Method: |
- பருப்பை அலசி வடிகட்டவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். கருவேப்பிலையை கழுவிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- பருப்பு, 225 மில்லி தண்ணீர், பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- மூடிவைத்து பிரஷரில் சமைக்கவும். இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- குழம்பு பதம் வரும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
ஆம்லேட் செய்முறை: - வெங்காயம், மிளகாயை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
- மஞ்சள் தூள், அரைத்த மிளகு, 1/4 தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- முட்டைகளை அடித்துக் கொள்ளவும்; நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் மசாலா கலவை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக அடிக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- முட்டை கலவையை இரண்டாக பிரித்துக் கொள்ளவும்.
- பாதி முட்டை கலவையை கடாயில் ஊற்றவும்.
- இரு புறமும் பொரிக்கவும். கவனமாக பொரிக்கவும்.
- ஆம்லேட் தயாரானதும், 4-6 முக்கோண துண்டுகளாக வெட்டி பாசி பருப்பு ஆணம் இருக்கும் பாத்திரத்தில் போடவும்.
- அனைத்து முட்டை கலவைகளுக்கும் இதே முறைகளை பின்பற்றவும்.
பொரிக்கும் முறை: - சிறிய கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும், கருவேப்பிலை மற்றும் அரைத்த சோம்பு சேர்த்து வறுக்கவும்.
- அரை நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- இதை பாசி பருப்பு ஆணம் இருக்கும் பாத்திரத்தில் சேர்க்கவும்.
- நெய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- நன்றாக கலக்கி, மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- முட்டை பருப்பாணம் சாப்பிடத் தயார்

Notes: |
இது சாதம் மற்றும் சிக்கன் சேர்வா,இறால் மசாலா,கார மீன் வறுவல்,மட்டன் சேர்வா,மிளகு-சீரக மட்டன் மசாலா,காரட் சாலட் ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. காய்கறி பருப்பாணம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். |