மட்டன் தால்ச்சா
recipe Image
 
மட்டன் தால்ச்சா பருப்பு, காய்கறி மற்றும் ஆட்டுக் கறியின் சுவை சேர்ந்தது. நெய் சாதம் மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் சாப்பிட சுவையானது.
Cooking Time : 45-60 நிமிடங்கள்

Ingredients:
  • துவரம் பருப்பு – 200 கிராம் அல்லது 1 டீ கப்(25௦ மில்லி)
  • எலும்புடன் கூடிய மட்டன் – 400 கிராம்
  • இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
  • பட்டை – 1” நீள துண்டு
  • கிராம்பு – 2
  • வெங்காயம் – 250 கிராம்
  • தக்காளி – 2 நடுத்தர அளவு
  • பச்சை மிளகாய் – 2 மிதமான காரத்துக்கு அல்லது 4 அதிக காரத்துக்கு
  • சமையல் எண்ணெய் – 5௦ மில்லி அல்லது 3 மேசைக்கரண்டி
  • டின் தேங்காய் பால் – 3 மேசைக்கரண்டி அல்லது
  • 15௦ மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
  • கருவேப்பிலை – 8-1௦
  • நறுக்கிய கொத்தமல்லி இலை/ புதினா – 2-3 தேக்கரண்டி
  • புளி – 2cm அளவு உருண்டை
  • வெந்நீர் – 1௦௦ மில்லி

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1-2 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
  • ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 மிதமான காரத்துக்கு அல்லது
  • 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு

காய்கறிகள்:

  • உருளைக் கிழங்கு பெரியது – 2
  • காரட் பெரியது – 1
  • கத்திரிக்காய் – 6-8
  • முட்டை கோஸ் – 3௦ கிராம் (விரும்பினால்)
  • சௌசௌ – 5௦ கிராம் அல்லது 1/4 நடுத்தர அளவு (விரும்பினால்)
  • வாழைக்காய் – 1 சிறியது (விரும்பினால்)
Method:

    தயாரிக்கும் முறை:

    1. பருப்பை அலசி வடிக்கட்டவும்.
    2. கறியை சுத்தம் செய்து அலசவும்.
    3. வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி/புதினா இலையை நறுக்கிக் கொள்ளவும்; பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
    4. உருளைக்கிழங்கை உரித்து 1 &1/2” துண்டுகளாக வெட்டவும்.
    5. காரட்டை உரித்து 2cm நீள வட்ட துண்டுகளாக வெட்டவும்.
    6. மற்ற காய்கறியை 1” துண்டுகளாக வெட்டவும்.
    7. புளியைக் கழுவி, வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

    சமையல் முறை:

    1. பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
    2. பருப்பு, 4௦௦ மில்லி தண்ணீர் மற்றும் பாதி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
    3. சட்டியை மூடி பிரஷரில் சமைக்கவும். இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியவுடன் மூடியை திறக்கவும். வெந்த பருப்பைத் தனியாக வைக்கவும்.
    4. பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
    5. எண்ணெய் சூடானதும், பாதி கருவேப்பிலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
    6. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் வதக்கவும்.
    7. மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    8. அனைத்து மசாலாத் தூள்கள் மற்றும் மட்டன் சேர்த்து மேலும் 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
    9. உப்பு, நறுக்கிய கொத்தமல்லி/புதினா மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
    10. 1 கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி மிதமான சூட்டில் பிரஷரில் சமைக்கவும்.
    11. விசில் வந்தவுடன், அடுப்பை குறைத்து 1௦-12 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியவுடன் மூடியைத் திறக்கவும்.
    12. அடுப்பை பற்ற வைத்து, காய்கறிகள் மற்றும் 1/2 கப் தண்ணீரை சமைத்த கறியுடன் சேர்த்து கலக்கவும்.
    13. 1-2 விசில்கள் வரும் வரை பிரஷரில் சமைக்கவும்.
    14. சமைத்த பருப்பை இதில் சேர்த்து கிளறவும்.
    15. புளிச் சாறை சேர்த்து கலக்கி, 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
    16. குழம்பு கெட்டியாக இருந்தால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    17. கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
    18. மீதமுள்ள கருவேப்பிலை கொண்டு அலங்கரிக்கவும்.
    19. மட்டன் தால்ச்சா பரிமாறத தயார்.
    Notes:
    சௌசௌ சேர்ப்பதாக இருந்தால், தண்ணீர் அளவை 1௦௦ மில்லி அளவு குறைவாக சேர்க்கவும். ஏனெனில் இந்த காய் அதிகம் நீர் விடும். மாறுதலுக்கு <a href=”/recipes/Chicken-Lentils-Curry”>சிக்கன் தால்ச்சா</a> அல்லது <a href=”/recipes/Aubergine-Lentils-Curry”>தால்ச்சா</a> முயற்சிக்கவும். சமையல் நேரம் மாறுதலுக்கு <a href=”/cooking warning”>சமையல் எச்சரிக்கை</a >பார்க்கவும்.