கோலா உருண்டை
recipe Image
 
கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ்.
Preparation Time : 20-30 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Ingredients:
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1/2 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – 250 மில்லி பொரிக்க

அரைக்க வேண்டியவை:

  • கொத்து இறைச்சி(கைமா) – 300 கிராம்
  • நறுக்கிய வெங்காயம் – 6 மேசைக்கரண்டி
  • இஞ்சி-பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 3
  • பட்டை – 1” நீள துண்டு
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • கசகசா – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • துருவிய தேங்காய் – 5 மேசைக்கரண்டி
  • பொட்டு கடலை – 4 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
Method:
  1. வெங்காயம், மிளகாய் மற்றும் தேங்காயை பெரிதாகவும், கொத்தமல்லியை சிறிதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  2. கைமாவை அலசி வடிக்கட்டவும்.
  3. பொட்டு கடலை, பட்டை, கிராம்பு, தோல் இல்லாத ஏலக்காய், கசகசாவை தண்ணீர் இல்லாமல் அரைக்த்து தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள அனைத்து அரைக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். கறி அரைபடவில்லை எனில், 2 பாகமாக பிரித்து அரைக்கவும்.
  4. அரைத்த கறி, அரைத்த பொட்டு கடலை போடி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. அவற்றை 3cm பந்துகளாக பிடித்துக் கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  7. 5-6 கறி உருண்டைகளை ஒரே நேரத்தில் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
Notes:
இதை, விருந்துகளில் பசி உண்டாக்கும் உணவாக அல்லது மதிய உணவு/ இரவு உணவில் சைடு-டிஷ்ஷாகவும் பரிமாறலாம்.