பான்கேக்
| |
|
|
குழந்தைகள் விரும்பும் பான்கேக்கை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
|
Ingredients: |
- முட்டை – 2
- பால் – 3௦௦ மில்லி
- மைதா மாவு – 1௦ மேசைக்கரண்டி நிறைய அல்லது
- 25௦ மில்லி கப் நிறைய
- வெண்ணெய் – 5 கிராம் (விரும்பினால்)
- வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
- வெண்ணெய்/எண்ணெய் – 25 மில்லி வறுக்க
|
Method: |
- முட்டையை நன்றாக அடித்து, பால் சேர்த்து அடிக்கவும்.
- ஒரு நேரத்தில் ஒரு கரண்டி மாவு சேர்த்து கலக்கவும்.
- எல்லா மாவையும் இப்படி சேர்த்ததும், வெண்ணிலா எசென்ஸ் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மாவு கலவையை 15 நிமிடங்கள் மென்மையாகும் வரை வைக்கவும்.
- சிறிய தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- ஒரு பெரிய கரண்டி மாவை தவாவில் ஊற்றி பரப்பவும்.
- விரும்பினால், சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும்.
- ஒரு நிமிடம் சமைக்கவும்.
- அதைத் திருப்பி, மீதும் ஒரு நிமிடம் சுடவும்.
- மீதமுள்ள மாவுக்கும் இதே முறையைப் பின்பற்றவும்.
|
Notes: |
பான்கேக்குகள், எலுமிச்சை சாறு & சர்க்கரை, தேன்/ வாழைப்பழ துண்டுகள்/ ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் மற்றும் கிரீம்/ சாக்லேட் பரவல் ஆகியவற்றுடன் சுவைக்கத்தக்கது. |