பரங்கிக்காய் புடி
recipe Image
 
பரங்கிக்காய் கிடைக்கும் நாட்களில் ஸ்பெஷல் ஆக செய்யப்படும் உணவு.
Preparation Time : 15-20 நிமிடங்கள்

Cooking Time : 20-30 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • பரங்கிக்காய் – 5௦௦ கிராம்
  • காய்ந்த சிகப்பு மிளகாய் – 4
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சில
  • வெல்லம் – 25௦ கிராம்
  • அரிசி மாவு – 3 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் தாளிக்க

நீள வட்ட அரிசி உருண்டைகளுக்கு தேவையானவை:

  • அரிசி மாவு – 1/2 கப்
  • தேங்காய் துண்டுகள் – 1/4 கப்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
  1. அரிசி மாவு உருண்டை செய்முறை:
  2. அரிசி மாவு, தேங்காய் துண்டுகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி கெட்டியாக மாவு பிசையவும்.
  3. ௦.5 cm அகல மாவு உருண்டையை நீள வட்ட மாவு உருண்டைகளாக உருட்டவும்.
  4. எல்லா மாவுக்கும் இதே முறையைப் பின்பற்றவும்.

செய்முறை:

  1. ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும். காய்ந்த மிளகாய், கடுகு, கருவேப்பிலை மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  2. நறுக்கிய பரங்கிக்காய், உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து சமைக்கவும்.
  3. இன்னொரு பாத்திரத்தில், வெல்லம் எடுத்துக்கொண்டு, அதில் தண்ணீர் சேர்த்து பாகு செய்யவும்.
  4. கல் துணுக்குகளை நீக்க, இதை வடிகட்டியில் வடிக்கவும்.
  5. அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து வேக வைத்த பரங்கிக்காயுடன் சேர்க்கவும்.
  6. வெல்லப் பாகையும் சமைத்த பூசணிக்காயுடன் சேர்க்கவும்.
  7. மாவு உருண்டைகளையும் துருவிய தேங்காயையும் சமைத்த பூசணிக்காயுடன் சேர்க்கவும்.
  8. மூடி வைத்து 7-8 நிமிடங்கள் சமைக்கவும்.