பாஸ்தா பேக்
recipe Image
 
ராஜ இறால் மற்றும் தக்காளி சாஸுடன் சமைக்கப்படும் பாஸ்தா, குளிர் காலத்திற்கு சுவையான உணவாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • பாஸ்தா (Penne) – 25௦ கிராம்
  • டின் தக்காளி – 4௦௦ கிராம்
  • வெங்காயம் – 75 கிராம்
  • பூண்டு – 2 பெரிய பல்லு
  • காய்ந்த துளசி இலை (basil) – 1/2 தேக்கரண்டி அல்லது
  • புதிய துளசி இலை நறுக்கியது – 5-6
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • கருப்பு மிளகு நுணுக்கியது – 1/2 தேக்கரண்டி
  • ராஜ இறால் – 1௦௦ கிராம்
  • சீஸ் – 1௦௦ கிராம்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – பாஸ்டா வேக வைக்க தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் – 2 மேசைக்கரண்டி
Method:
  1. வெங்காயத்தையும் பூண்டையும் உரித்து நறுக்கிக் கொள்ளவும். சீஸைத் துருவிக் கொள்ளவும். இறாலைக் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்; எல்லா தக்காளிகளையும் மெல்லிய சாஸாக அரைத்துக் கொள்ளவும்.
  2. ஓவனை 180° செல்சியஸ் அல்லது 350° பாரன்ஹீட் சூட்டில் வைக்கவும்.
  3. ஒரு உயரமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சூடாக்கவும். பாஸ்தாவை வேகும் வரை சமைத்து, வடித்து தனியாக வைக்கவும்.
  4. ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  5. அரைத்த தக்காளி சாஸ், துளசி இலை, உப்பு, நுணுக்கிய மிளகு, மிளகாய் தூள், ராஜ இறால் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. சமைத்த பாஸ்டாவை சேர்த்து கிளறவும்.
  7. பாத்திரத்தில் இருந்து பொருட்களை நீக்கி ஒரு அகலமான செவ்வக ஓவன் ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
  8. ஒரு அலுமினிய ஃபாயில் கொண்டு மூடி, ஓவனின் நடு தட்டில் 2௦ நிமிடங்கள் வைக்கவும்.
  9. ஓவனை நிறுத்தி பாத்திரத்தை வெளியே எடுக்கவும்.
  10. ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கவும்.
  11. சுவையான ஓவனில் சுட்ட பாஸ்தா பரிமாறத் தயார்.
Notes:
இறாலுக்கு பதிலாக எலும்பில்லாத சிக்கனை பயன் படுத்தலாம்.