பருப்பு-சுரைக்காய் கூட்டு
recipe Image
 
பருப்பு-சுரைக்காய் கூட்டு சாதம் மற்றும் எல்லா வகை குழம்புடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Serves : சிறிய குடும்பம்

Ingredients:
  • சுரைக்காய் – 1 சிறியது அல்லது 1/2 பெரியது
  • பாசி பருப்பு – 75 கிராம் அல்லது 1/3-2௦௦ மில்லி கப்
  • நறுக்கிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி
  • தக்காளி – 1/2
  • டின் தேங்காய் பால் – 2 தேக்கரண்டி அல்லது 2 மேசைக்கரண்டி வீட்டில் செய்த தேங்காய்ப்பால்
  • நெய் – 1 தேக்கரண்டி அல்லது வெண்ணெய் - 5 கிராம்
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • அரைத்த சோம்பு – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • எண்ணெய் – 3 தேக்கரண்டி
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
  1. பருப்பை அலசி வடிக்கவும்.
  2. காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கவும்.
  3. பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, பருப்பு, 15௦ மில்லி தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  4. சட்டியை மூடி பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
  5. தக்காளி, சுரைக்காய் வெங்காயம் மற்றும் பாதி வெங்காயம் ஆகியவற்றை சமைத்த பருப்புடன் சேர்க்கவும்.
  6. மூடி வைத்து பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
  7. ஒரு சிறிய கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும்.
  8. கருவேப்பிலை, அரைத்த சோம்பு, மிளகாய் தூள் மற்றும் மீதமுள்ள வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  9. இந்த கடாயை அடுப்பில் இருந்து அகற்றி, மீண்டும் பருப்பு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
  10. தாளித்தவை மற்றும் நெய்யை பருப்பு குழம்பில் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்
Notes:
சாதம் மற்றும் <a href="/recipes/Tamarind-egg-curry">முட்டை புளிக் குழம்பு</a>, <a href="/recipes/Tamarind-egg-omlette-curry">முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு</a>, <a href="/recipes/Garlic-curry">பூண்டு குழம்பு</a> மற்றும் <a href="/recipes/Cabbage-Fry">முட்டை கோஸ் பொரியல்</a> ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு, சுரைக்காய்க்கு பதில் பூசணிக்காயைப் பயன் படுத்தலாம்.