பட்டாணி கீமா
recipe Image

கொத்து இறைச்சியோடு பட்டாணி சேர்த்து சமைத்து சப்பாத்தி அல்லது சாதத்திற்கு தொட்டு கொள்ளலாம்.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Ingredients:
• பட்டாணி – 250 கிராம்
• கொத்து இறைச்சி (கீமா) – 100 கிராம்
• வெங்காயம் – 150 கிராம்
• தக்காளி – 2 சிறியது
• இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
• பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
• பட்டை – 1/2 “ நீள துண்டு
• கொத்தமல்லி இலை – சில
• எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
• எண்ணெய் – 3 மேசைக்கரண்டி இறுதியில் ( 2 மேசைக்கரண்டி விரும்பினால்)
• உப்பு – சுவைக்கேற்ப
• தண்ணீர் – தேவைக்கேற்ப

மசாலாத் தூள்:

• மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
• மிளகாய் தூள் – 1 மிதமான காரத்துக்கு அல்லது
• 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
• மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
• ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
Method:
1. கீமாவை தண்ணீரில் நன்றாக அலசி வடிக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கவும்.
3. ஒரு வாணலியை சூடாக்கி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் கீமாவை சேர்க்கவும்.
4. அணைத்து தண்ணீரும் வற்றும் வரை வேக வைக்கவும்.
5. வாணலியில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும்.
6. பிரஷர் குக்கரை சூடாக்கி மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.
7. பட்டை மற்றும் வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் பொரிக்கவும்.
8. கீமா, 1/4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
9. பிரஷரில் 2 விசில் வரும் வரை சமைக்கவும். அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியவுடன் மூடியைத் திறக்கவும்.
10. பட்டாணியை கீமாவுடன் சேர்த்து சில நிமிடங்கள் மூடி வைக்காமல் சமைக்கவும்.
11. எண்ணெய் சேர்க்கவும்; திக் ஆகும் வரை கொதிக்க விடவும்.
12. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
இது சாதம் மற்றும் சாம்பார், ரசம், பருப்பு, முட்டை புளிக் குழம்பு, முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. காய்கறி கீமா செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.