மிளகு-ஜீரக மட்டன் மசாலா
recipe Image
 
மிளகு-ஜீரக மட்டன் மசாலா, மிளகு சீராக மணத்துடன் மட்டன் சுவையாக இருக்கும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • எலும்புடன் கூடிய மட்டன் – 6௦௦ கிராம் – பெரிய துண்டுகளாக வெட்டியது
  • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • பட்டை – 3 cm நீள துண்டு
  • கிராம்பு – 2-3
  • வெங்காயம் – 300 கிராம்
  • பூண்டு – 10 சிறிய பல்லு
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி அலங்கரிக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலாத் தூள்கள்:

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • வறுத்து அரைக்க வேண்டியவை:
  • மிளகு – ¾ மேசைக்கரண்டி
  • ஜீரகம் – ¾ மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை – 7-8 (விரும்பினால்)
Method:
  1. வெங்காயம், இலைகளை நறுக்கவும்; மிளகாயை கிள்ளவும்; பூண்டை உரிக்கவும்;கருவேப்பிலையை அலசவும்.
  2. பிரஷர் குக்கரை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  3. பட்டை, கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. மசாலா தூள்கள், உப்பு மற்றும் மட்டன் துண்டுகள் சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
  7. ½ கப் தண்ணீர் சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்ப்பதாக இருந்தால், இப்போது சேர்க்கவும்.
  8. சட்டியை மூடி மிதமான சூட்டில் பிரஷரில் சமைக்கவும்.
  9. முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15-18 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும். அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
  10. மிளகு மற்றும் சீரகத்தை தனியாக ஒரு வாணலியில் 1-2 நிமிடங்கள் வறுக்கவும். கருவேப்பிலையுடன் சேர்த்து தண்ணீர் இல்லாமல் பொடியாக அரைக்கவும். அதை தனியாக வைக்கவும்.
  11. அரைத்த இந்த தூள்களை சமைத்த கறியுடன் சேர்க்கவும்.
  12. அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  13. மிதமான சூட்டில் 4-5 நிமிடங்கள் அல்லது குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
  14. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்
Notes:
சாதம்/ சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை /மைதா தோசையுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு <a href="/recipes/Pepper-jeera-chicken-curry">மிளகு-ஜீரகம் சிக்கன் மசாலா</a> முயற்சிக்கவும். சமையல் நேரம், மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும்.