உருளைக்கிழங்கு மசாலா
recipe Image
 
உருளைக்கிழங்கு மசாலா, பூரி, சப்பாத்தி, தோசை அல்லது ஏதேனும் காலை உணவுடன் சாப்பிடத் தக்கது.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Ingredients:
  • உருளைக்கிழங்கு – 3 நடுத்தர அளவு அல்லது 6 சிறியது (300 கிராம்)
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 5-6
  • வெங்காயம் – 200 கிராம்
  • இஞ்சி – 1/2 “ நீளம் மற்றும் 1/2” அகல துண்டு
  • கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
  • தக்காளி – 1 (விரும்பினால்)
  • கொத்தமல்லி இலை நறுக்கியது – 1/2 மேசைக்கரண்டி அலங்கரிக்க
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
Method:
  1. உருளைக்கிழங்கை உப்பு மற்றும் பாதி மஞ்சள் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் 5 நிமிடங்கள் அல்லது வேகும் வரை சமைக்கவும்.
  2. உரித்து மசிக்கவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும். தக்காளி சேர்ப்பதாக இருந்தால், அதை நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் சேர்க்கவும்.
  4. எண்ணெய் சூடானதும், கடுகு, கடலை பருப்பு, உடைத்த சிகப்பு மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, தக்காளி சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
  6. மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
  7. 1 கப் தண்ணீர் சேர்த்து, மசாலா திக் ஆகும் வரை சமைக்கவும்.
  8. எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து, நன்றாக கிளறி, அடுப்பில் இருந்து இறக்கவும்.
  9. பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.