புடலங்காய் கூட்டு

புடலங்காய் கூட்டு, சாதம் மற்றும் தென்னிந்திய குழம்புகளுக்கு சுவையான சைடு-டிஷ் ஆகும். |

Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
4-5

Ingredients: |
- புடலங்காய் – 1 அல்லது 250 கிராம்
- பாசி பருப்பு – 75 கிராம் அல்லது 1/3 டீ கப்
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1 மிதமான காரத்துக்கு அல்லது 2 அதிக காரத்துக்கு
- துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சில (விரும்பினால்)
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப

Method: |
- பருப்பை அலசி வடிக்கவும்.
- காயை சீவி, வெட்டி, விதிகளை நீக்கி 1cm துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, பருப்பு, 1/2 கப் தண்ணீர், பாதி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- மூடி வைத்து பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- தனியாக ஒரு வாணலியில் காயுடன் உப்பு மற்றும் மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து சமைக்கவும்.
- துருவிய தேங்காய், சோம்பு, மிளகாய் ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து 1-2 மேசைக்கரண்டி தண்ணீருடன் பசையாக அரைக்கவும்.
- அரைத்த கலவை மற்றும் சமைத்த பருப்பை காய்கறியுடன் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு மற்றும் கருவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும். இதை சமைத்த காய்கறியுடன் சேர்க்கவும்.
- நன்கு கிளறி பரிமாறவும்.

Notes: |
இது சாதம் மற்றும் சாம்பார், ரசம், பருப்பு, முட்டை புளிக் குழம்பு, முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு கீரை-பருப்பு குழம்பு-௦2/சுரைக்காய் கூட்டு /பச்சை தக்காளி கூட்டு செய்து பார்க்கலாம். புடலங்காய்க்கு பதிலாக பூசணிக்காய்/ பரங்கிக்காய்/ சுரைக்காய் பயன் படுத்தலாம். |