புடலங்காய் பொரியல்

புடலங்காய் பொரியல் தென்னிந்திய குழம்புகளுக்கு நல்ல சைடு-டிஷ். |

Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
3-4

Ingredients: |
- புடலங்காய் – 1 சிறியது அல்லது 250 கிராம்
- மஞ்சள் தூள் – சிட்டிகை
- காய்ந்த மிளகாய் – 1 மிதமான காரத்திற்கு அல்லது 2 அதிக காரத்துக்கு
- துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- கருவேப்பிலை – சில
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- உப்பு – சுவைக்கேற்ப

Method: |
- காயை சீவி, வெட்டி, விதிகளை நீக்கி 1cm துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து காயை பாதி வேக வைக்கவும்.
- ஒரு கடாயை சூடாக்கவும்.
- எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் மற்றும் கருவேப்பிலையை தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
- சமைத்த காய், மஞ்சள் தூள், ஜீரகத் தூள் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
- கடாயை மூடி மிதமான சூட்டில் 5-6 நிமிடங்கள் சமைக்கவும்.
- மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி, போதுமான தண்ணீர் உள்ளதா என சரி பார்க்கவும்.
- துருவிய தேங்காய் கொண்டு அலங்கரிக்கவும்.

Notes: |
இந்த பொரியல் சாதம் மற்றும் சாம்பார்,ரசம், பருப்பு, முட்டை புளி குழம்பு, முட்டை ஆம்லேட் புளி குழம்பு or பூண்டு குழம்பு ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. மாற்றத்துக்கு  சுரைக்காய் பொரியல்  முயற்சிக்கலாம். |