வெண்டிக்காய் பச்சடி
| |
|
|
வெண்டிக்காய் பச்சடி, பிரியாணியுடன் சாப்பிட ஏற்றது. |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
20-30 நிமிடங்கள்
Serves :
5-6
|
Ingredients: |
- வெண்டிக்காய் – 4௦௦ கிராம்
- வெங்காயம் – 1 நடுத்தர அளவு
- தக்காளி – 2
- பூண்டு – 3 பல்லு
- மிளகு – 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- சீனி – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சில
- வெள்ளை எள்ளு – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- சூரியகாந்தி எண்ணெய் – 6௦ மில்லி
- புளி – 2 cm உருண்டை
- வெந்நீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
|
Method: |
- வெண்டிக்காயின் நுனியை நீக்கவும். காயை நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். எள்ளை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- புளியை கழுவி வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, புளிச் சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
- எண்ணெயில் வெண்டிக்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயில் கருவேப்பிலை, மிளகு, பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, 4-5 நிமிடங்கள் கிளறவும்.
- புளிச் சாறு, 1/3 கப் தண்ணீர், சீனி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- வறுத்த வெண்டிக்காயை சேர்த்து 4-5 நிமிடங்கள் கிளறவும்.
- வெண்டிக்காய் வெந்ததும், அரைத்த எள்ளை சேர்க்கவும்.
- கருவேப்பிலை கொண்டு அலங்கரிக்கவும்
|
Notes: |
மாறுதலுக்கு, <a href="/recipes/Bhindikikatta"> வெண்டிக்காய் பச்சடி 2</a> அல்லது <a href="/recipes/Brinjal-Egg-plant-Aubergine-in-sour-sauce ">கத்திரிக்காய் பச்சடி </a> செய்து பார்க்கலாம். |
|