ரைத்தா
| |
|
|
தயிர், வெள்ளரிக்காய்/ காரட்/ வெங்காயம்/ தக்காளி ஆகியவற்றால் ஆன ரைத்தா பிரியாணிக்கு ஏற்ற சைடு-டிஷ். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Serves :
6-8
|
Ingredients: |
- தயிர் – 5௦௦ கிராம்
- வெள்ளரிக்காய் – 1/2 நடுத்தர அளவு அல்லது
- காரட் – 1 அல்லது வெங்காயம் -1 நடுத்தர அளவு அல்லது
- தக்காளி – 3 சிறியது
- பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
- கொத்தமல்லி இலை நறுக்கியது – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
- எலுமிச்சை சாறு/ புதினா சாஸ் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- உப்பு – சுவைக்கேற்ப
|
Method: |
- வெள்ளரிக்காய்/காரட்/நறுக்கிய வெங்காயம் அல்லது தக்காளியை பொடிசாக நறுக்கவும். பச்சை மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் அதையும் பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
- தயிர், உப்பு, புதினா சாஸ்/எலுமிச்சை சாறு, மிளகாய், நறுக்கிய காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
- பரிமாறும் பாத்திரத்தில் பரிமாறவும்.
|