ரசம்
recipe Image
 
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரிந்த எளிமையான மற்றும் சுவையான உணவு.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 10 நிமிடங்கள்

Serves : 2-3

Ingredients:
  • புளி – 2cm அளவு உருண்டை/ நெல்லிக்காய் அளவு
  • தக்காளி சிறியது – 1/2
  • பூண்டு பல்லு – 2 சிறியது
  • ஜீரகம் – 1/2 தேக்கரண்டி
  • மிளகு – 1/2 தேக்கரண்டி
  • காய்ந்த சிகப்பு மிளகாய் – 1
  • கருவேப்பிலை – 4-5
  • கொத்தமல்லி இலை – சில
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • சாம்பார் பொடி – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • வெந்நீர் – 2௦௦ மில்லி
  • தண்ணீர் – 25௦ மில்லி
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
Method:
  1. புளியைக் கழுவி வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஜீரகம், மிளகு, மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை இடித்துக் கொள்ளவும்.
  4. புளிச் சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
  5. 1/2 லிட்டர் வாணலியை மிதமான சூட்டில் சூடாக்கி, எண்ணெய் சேர்த்து, இடித்த பொருட்களை தாளிக்கவும்.
  6. தக்காளி, புளிச் சாறு, கொத்தமல்லி இலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  7. விருப்பப் பட்டால் சாம்பார் பொடி சேர்க்கலாம்.
  8. அடுப்பை குறைத்து வாணலியை மூடி 5-6 நிமிடங்கள் சமைக்கவும்.
Notes:
புளிச் சாறுக்கு பதிலாக எலுமிச்சை சாறு அல்லது தக்காளி கூழ் சேர்க்கலாம். சிறந்த சுவைக்கு, குழைவாக சமைத்த சாதம், நெய் மற்றும் பருப்புடன் சாப்பிடலாம்.