சாம்பார் வடை
recipe Image
 
வடையை சாம்பாரில் ஊற வைத்து சுவையாக சாப்பிடும் முறை.
Cooking Time : 20-30 நிமிடங்கள்

Ingredients:
  • உளுந்தப் பருப்பு – 25௦ கிராம் அல்லது 1 கப்
  • அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
  • சோடா மாவு – 1/8 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1 சிறியது
  • நுணுக்கிய மிளகு – 1 தேக்கரண்டி
  • துருவிய இஞ்சி – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 7-8
  • பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
  • எண்ணெய் – 3௦௦ மில்லி வறுக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப
Method:
  1. இட்லி-தோசை சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
  2. உளுந்தப் பருப்பை கழுவி 3௦-45 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை வடிக்கவும்.
  3. வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவிக் கொள்ளவும். மிளகை நுணுக்கிக் கொள்ளவும்.
  4. ஊற வைத்த உளுந்தப் பருப்பு, உப்பு, சோடா மாவு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  5. அரைத்த மாவை தனியாக வைக்கவும்.
  6. நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் நுணுக்கிய மிளகு ஆகியவற்றை மாவில் சேர்த்து கலக்கவும். மாவு தண்ணீயாக இருந்தால் அரிசி மாவு சேர்க்கலாம்.
  7. 2 மணி நேரம் வைக்கவும்.
  8. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  9. ஒரு கோப்பையில் கையை நனைக்க தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
  10. அதில் கையை நனைத்துக் கொள்ளவும்.
  11. 1 1/2 மேசைக்கரண்டி மாவு எடுத்து உள்ளங்கையில் தட்டி நடுவில் ஓட்டை போட்டு வடை பிடித்துக் கொள்ளவும். சுத்தமான பிளாஸ்டிக் பை இருந்தால் அதில் வடையை தட்டலாம்.
  12. இதை சூடான எண்ணெயில் போடவும். 2-3 வடைகளை ஒரே சமயத்தில் பொரிக்கவும்.
  13. அருகில் ஒரு பெரிய பாத்திரத்தில் சாம்பார் வைத்துக் கொள்ளவும்.
  14. வடையை இரு புறமும் பொரித்தவுடன் கரண்டியால் எடுத்து எண்ணெய் வடியும் பாத்திரத்தில் வைக்கவும்.
  15. எல்லா வடைகளையும் சுட்டவுடன், அவற்றை சாம்பாரில் போடவும்.
  16. வடை சாம்பாரை உறிஞ்சுவதற்காக சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  17. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
Notes:
மாற்றத்துக்கு <a href="/recipes/dahi-bada">தயிர் வடை</a> முயற்சிக்கலாம். வடை மீதமானால் இதை எளிதில் செய்யலாம்.