சுரைக்காய் கூட்டு
| |
|
|
சுரைக்காயை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்தால் சுவையாக இருக்கும். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
2-3
|
Ingredients: |
- சுரைக்காய் – 1 சிறியது அல்லது 1/2 பெரியது
- பாசி பருப்பு – 75 கிராம் அல்லது 1/3 டீகப்
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2 மிதமான காரத்துக்கு அல்லது
- 3 அதிக காரத்துக்கு
- ஜீரகம் – 1/2 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சில (விரும்பினால்)
- எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
- நெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
|
Method: |
- பருப்பை அலசி வடிக்கவும்.
- காயை சீவி, 2 cm துண்டுகளாக வெட்டவும்.
- பிரஷர் குக்கரை சூடாக்கி, பருப்பு, 15௦ மில்லி தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- குக்கரை மூடி பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- தனியாக ஒரு வாணலியில், நறுக்கிய காய், உப்பு மற்றும் மீதமுள்ள மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சமைக்கவும்.
- ஒரு சிறிய கடாயை சூடாக்கி, தேங்காய், ஜீரகம், சோம்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். ஆறியதும் அரைக்கவும்.
- அரைத்த கலவை மற்றும் சமைத்த பருப்பு ஆகியவற்றை சமைத்த காயுடன் சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்ததை காய் வாணலியில் சேர்த்து கிளறவும்.
- நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
|
Notes: |
மாறுதலுக்கு <a href="/recipes/Spinach-Dhal-curry-02">கீரை மற்றும் பருப்பு கூட்டு</a>, <a href="/recipes/Marrow-Dhal-curry">பருப்பு சுரைக்காய்</a>, <a href="/recipes/Marrow-stirfry">சுரைக்காய் பொரியல்</a> அல்லது <a href="/recipes/Green-Tomatoes-and-lentils-curry">பச்சை தக்காளி கூட்டு</a> செய்து பார்க்கலாம்.
சுரைக்காய்க்கு பதிலாக சௌசௌ/ பூசணி/ பச்சை தக்காளி அல்லது புடலங்காய் சேர்க்கலாம்.
|