சால்மன் மீன் குழம்பு

இது சுலபமான, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓவனில் செய்யக் கூடிய உணவு.

[Total: 0    Average: 0/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 3-4

பின்னிணைப்பு(Tags) :
முக்கிய செய்பொருள் : மீன்
சமையல் குறிப்பு வகை : மதிய உணவு

தேவை :
  • சால்மன் – 45௦ கிராம்
  • வெங்காயம் – 1 நடுத்தர அளவு
  • இஞ்சி – 1” நீள 1” மொத்த துண்டு
  • பச்சை மிளகாய் விதையில்லாமல் – 3 மிதமான காரத்துக்கு அல்லது
  • 5 அதிக காரத்துக்கு
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • அரைத்த மிளகு – 1/2 தேக்கரண்டி
  • நறுக்கிய புதினா அல்லது சோம்புக் கீரை – 2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
  • கிரீம் – 1௦௦ மில்லி
  • சமையல் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :
  1. ஓவனை 180° செல்சியஸ்/ 350° பாரன்ஹீட் சூட்டில் வைக்கவும்.
  2. வெங்காயம், புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கவும்; பச்சை மிளகாயை விதை நீக்கிய பிறகு வெட்டவும். இஞ்சியை பொடிசாக நறுக்கவும்.
  3. அடுப்பில் வைக்கக் கூடிய ஓவன்-ப்ரூப் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.
  4. அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைக்கவும்.
  5. எண்ணெய் சேர்க்கவும்; அது சூடானதும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
  6. மஞ்சள் தூள், அரைத்த மிளகு, உப்பு மற்றும் மீன் துண்டுகள் சேர்க்கவும். சில நிமிடங்கள் வறுத்தபின், அடுப்பை அணைக்கவும்.
  7. நறுக்கிய புதினா, ¾ பங்கு கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். மீன் உடையாமல் லேசாக கிளறவும்.
  8. மீன் பாத்திரத்தை மூடி ஓவனின் நடு தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் சமைக்கவும்.
  9. ஓவனைஅணைத்து, மீன் பாத்திரத்தை ஓவனில் இருந்து நீக்கவும்.
  10. கிரீமை சேர்த்து லேசான சூட்டில் சில நிமிடங்கள் வைக்கவும்.
  11. மீதமுள்ள கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.

குறிப்பு : சால்மனுக்கு பதிலாக ஏதேனும் வெள்ளை மீனை சேர்க்கலாம். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

மற்ற பெயர் : Salmon meen kuzhambu


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close