ஆலு கோபி

ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.

[Total: 2    Average: 3.5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்

பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : உருளைக்கிழங்கு , காய்கறி
சமையல் குறிப்பு வகை : இரவு உணவு , மதிய உணவு

தேவை :
  • உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 3 (300 கிராம்)
  • காலிபிளவர் (சிறியது) - 1 (300 கிராம்)
  • வெங்காயம் - 250 கிராம் (அல்லது) 3 பெரியது
  • தக்காளி - 250 கிராம் (அல்லது) 4
  • தக்காளி ப்யூரி - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • 2 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவைக்கேற்ப
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கொத்தமல்லித் தழை (சிறியதாக நறுக்கியது) - 1/2 டீஸ்பூன்

மசாலா பொடிகள்

  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலாப்பொடி - 3/4 - 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை :
  1. காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி சூடான நீரில் போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கு வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாணலியை அடுப்பில் வைத்து சூடு செய்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் தவிர மீதமுள்ள எண்ணெய் எல்லாவற்றையும் விடவும்.
  4. உருளைக்கிழங்கை வாணலியில் போட்டு நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். இதற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகும்.
  5. வறுத்த உருளைக்கிழங்கை வாணலியில் இருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  6. அதே எண்ணெயில் காலிபிளவர் போட்டு 3 முதல் 4 நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும். அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. இப்போது அதே வாணலியில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 7 முதல் 8 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
  9. இத்துடன் தக்காளி மற்றும் எல்லா மசாலாப் பொடிகளையும் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  10. இப்போது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவரை சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  11. இக்கலவையுடன் 200 மிலி தண்ணீர், 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும், கலவை கொதிக்க ஆரம்பித்த உடன் தீயைக் குறைத்து, குறைவான தீயில் 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
  12. தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  13. கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/aloo-gobi


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close