சுரைக்காய் இறால் குழம்பு

சுரைக்காயுடன் இறால் அல்லது முட்டை சேர்த்து சமைக்கப்படும் சுவையான சைடு-டிஷ்.

[Total: 2    Average: 4.5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 2-3

பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : கடல்வாழ்வன
சமையல் குறிப்பு வகை : இரவு உணவு மதிய உணவு

தேவை :
  • சுரைக்காய் – 1 சிறியது (அ) 1/2 பெரியது
  • வெங்காயம் – 1 சிறியது
  • தக்காளி – 1/2
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • ராஜ இறால் – 8-1௦ அல்லது முட்டை – 1
  • பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
  • டின் தேங்காய் பால் – 1 மேசைக்கரண்டி அல்லது
  • 1௦௦ மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
  • பட்டை – 1 cm நீள துண்டு
  • கருவேப்பிலை – 1 குச்சி (விரும்பினால்)
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை :
  1. வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். சுரைக்காயை தோல் சீவி 2 cm துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, கருவேப்பிலை, வெங்காயம், மற்றும் மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  3. தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  4. நறுக்கிய காய் சேர்த்து 1-2 நிமிடங்கள் வதக்கவும்.
  5. உப்பு மற்றும் 3/4 கப்(250ml கப்) தண்ணீர் சேர்க்கவும்.
  6. மூடி வைத்து 1௦-12 நிமிடங்கள் மிதமான சூட்டில் சமைக்கவும்.
  7. அவ்வப்போது கிளறவும். போதுமான தண்ணீர் உள்ளதா என சரி பார்த்து கொள்ளவும்.
  8. காய் வெந்ததும், முட்டை அல்லது இறால் சேர்க்கவும்.
  9. முட்டை சேர்த்தால், சிறு பாத்திரத்தில் உடைத்து அடித்து பின்னர் காயுடன் சேர்க்கவும்.
  10. தேங்காய் பால் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.

குறிப்பு : இது சாதம் மற்றும் சாம்பார், ரசம், பருப்பு, முட்டை புளி குழம்பு, முட்டை ஆம்லெட் புளி குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு கோவக்காய் பொரியல், பீர்க்கங்காய் இறால் குழம்பு அல்லது முருங்கைக்காய் இறால் மசாலா செய்து பார்க்கலாம்.

மற்ற பெயர் : marrow curry, sorakkai raal aanam,surakkai raal kuzhambu

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/marrow-curry


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close