மிளகு-ஜீரக சிக்கன் மசாலா

மிளகு-ஜீரக சிக்கன் மசாலா, மிளகு சுவை மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை சிக்கனுடன் சேர்க்கக் கூடியது.

[Total: 1    Average: 4/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்

பின்னிணைப்பு(Tags) :
முக்கிய செய்பொருள் : கோழி இறைச்சி
சமையல் குறிப்பு வகை : மதிய உணவு

தேவை :
  • எலும்புடன் கூடிய சிக்கன் – 6௦௦ கிராம் – பெரிய துண்டுகளாக வெட்டியது
  • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி கடைசியில் (விரும்பினால்)
  • பட்டை – 3 cm நீள துண்டு
  • கிராம்பு – 2-3
  • வெங்காயம் – 300 கிராம்
  • பூண்டு – 7-8 சிறிய பல்லு
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1-2 தேக்கரண்டி அலங்கரிக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

வறுத்து அரைக்க வேண்டியவை:

  • மிளகு – 1/2 மேசைக்கரண்டி
  • ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 1 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை :
  1. வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கவும்; பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்; பூண்டை உரிக்கவும். கருவேப்பிலையை அலசவும்.
  2. பிரஷர் குக்கரை சூடாக்கி, எண்ணெய் சேர்க்கவும்.
  3. எண்ணெய் சூடானதும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பல்லை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. அனைத்து மசாலாத் தூள்கள், உப்பு மற்றும் சிக்கனை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
  7. ½ கப் தண்ணீர் சேர்த்து 15-2௦ நிமிடங்கள் சட்டியை மூடி சிக்கனை சமைக்கவும். நன்றாக கிளறி, அவ்வப்போது தண்ணீர் அளவை சரி பார்க்கவும். தேவைப்பட்டால் அதிகம் வெந்நீர் சேர்க்கவும்.
  8. மிளகு மற்றும் சீரகத்தை தனியாக ஒரு வாணலியில் 1-2 நிமிடங்கள் வறுக்கவும். கருவேப்பிலையுடன் இதை தண்ணீர் இல்லாமல் பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.
  9. சமைத்த சிக்கனுடன் இந்த அரைத்த மிளகு,சீரகத்தை சேர்க்கவும்.
  10. அடி பிடிக்காமல் இருக்க, 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  11. மிதமான சூட்டில் 4-5 நிமிடங்கள் அல்லது குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
  12. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.

குறிப்பு : சாதம்/ சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை/மைதா தோசையுடன் சாப்பிட ஏற்றது. மாற்றத்திற்கு மிளகு-ஜீரக மட்டன் மசாலா செய்து பார்க்கலாம்.

மற்ற பெயர் : pepper jeera chicken, milagu jeeraga kozhi

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/pepper-jeera-chicken-curry


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close