உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா

உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா, ஆட்டு இறைச்சியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் ஒரு சைடு-டிஷ்.

[Total: 2    Average: 5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்

பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : ஆட்டு இறைச்சி , உருளைக்கிழங்கு
சமையல் குறிப்பு வகை : மதிய உணவு ,

தேவை :
  • ஆட்டுக் கறி/ மட்டன் – 5௦௦ கிராம்
  • உருளைக்கிழங்கு – 2 சிறியது
  • வெங்காயம் – 250 கிராம்
  • தக்காளி – 3
  • இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
  • 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
  • பச்சை மிளகாய் – 1
  • ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • பட்டை – 1” நீள துண்டு
  • கொத்தமல்லி இலை நறுக்கியது – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி மற்றும் 2 தேக்கரண்டி இறுதியில்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை :
  1. உருளைக்கிழங்கை 2cm அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்; வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்; பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  2. பிரஷர் குக்கரில் எண்ணெய்யை சூடாக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். அவற்றை குக்கரில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும்.
  3. பட்டை மற்றும் வெங்காயத்தை பிரஷர் குக்கரில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  5. நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் ஜீரகத் தூள் சேர்த்து கிளறி 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  6. மட்டன் துண்டுகளை உப்புடன் சேர்த்துக் 3-4 நிமிடங்கள் கிளறவும்.
  7. மூடி வைத்து மிதமான சூட்டில் பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும். பிரஷர் அடங்கியவுடன் மூடியைத் திறக்கவும்.
  8. மிதமான சூட்டில் குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  9. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு : இது சாதம்/சப்பாத்தி/நாணுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு சமையல் குறிப்பு கவனிக்கவும்.

மற்ற பெயர் : potato mutton masala, urulaikkizhangu mutton masala

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/potato-mutton-masala


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close